மனதைத் தொடும் அழகியல் தலைப்பு. நீளிரா -றஞ்சி

அது ஒரு பயங்கரமான இரவின் திகிலையும் நடுக்கத்தையும் எம்முள்ளேயும் உண்டாக்கியது. 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கில் இந்திய இராணுவத்தினரால் நடந்த வன்முறைகள் கொலைகளை நினைவில் கொண்டு வந்தது.

நீளிரா படத்தில் காட்டப்பட்ட திருமணக் காட்சி எங்கள் வீட்டிலும் நடந்ததை ஞாபகப்படுத்திச் சென்றது.

நாய்கள் ஊளையிடும் சத்தமும் பூட்ஸ்களும் துப்பாக்கிகளும் அச்சமூட்டும் அவ்விரவின் நேரத்தை கடக்க திகிலாகவே இருந்தன. என்ன நடக்கப் போகிறது என்ற பயம் மனதைக் கவ்விக்கொண்டது.

இந்திய இராணுவம் வீட்டிற்குள் நுழைந்த போது அவ் வீட்டின் பெண்கள் அவசர அவசரமாக தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டமை அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே. அவர்களின் அச் செய்கை இந்திய இராணுவத்தால் பெண்களுக்கு நடந்த வன்முறைகளை இச்செய்கை காட்டி நிற்கின்றது.. எமக்கு அது கறைபடிந்த ஒரு வரலாறாகும்

ஒரு திருமணத்தை நடத்த இந்திய அரசிடமும் இலங்கை அரசிடமும் அனுமதி பெறவேண்டியிருந்தது. என்பது புதிய விடயம்.

தமிழினியின் நடிப்பும் அவரின் காதல் கதையும் மனதை நெகிழச் செய்தன.

இரண்டாம் தலைமுறையினருக்கு தெரியாத விடயத்தை நீளிராவை திரையில் பார்த்து அவர்கள் தெரிந்து கொள்ளவும் அவை பற்றிய தேடல்களை செய்யவும் , வழி வகுத்துள்ளது நீளிரா

காலைப் பொழுது, வழமையான போர் படங்கள் போலல்லாமல் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் இருதரப்பும் அமைதியாக பிரிந்து செல்லும் காட்சியும் தமிழினியின் பெருமூச்சும் என்ன நடக்கப் போகிறது என்றிருந்த எமக்கும் ஒரு நின்மதியை தந்தது படத்தின் முடிவு.

படத்தில் வரும் பெண்களாகவே எமது உணர்வுகளும் அச்சத்திலிருந்தன. இத்திரைப்படத்தை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *