நன்றி: சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா
நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் தேசிய கவுன்சில் அலுவலகத்தில் அவரது பணியில் அதிக வெற்றிகளை பெற ஊடறு சார்பாக வாழ்த்துகிறோம்
சுவிஸ் நாட்டின் 26 மாநிலங்களிலிருந்து (Canton)-Helvetia Bern பாராளுமன்றுக்கு 200 உறுப்பினர்கள் தெரிவாக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்த 200 பா.மன்ற உறுப்பினர்களிலிருந்து 46 பிரதிநிதிகள் மீண்டும் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் பா.மன்றிற்கு உதவிடும் வழிகாட்டிகளாக (Senator) நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களில் 7 பிரதிநிதிகள் சட்டம்,நீதி, பாதுகாப்பு,காப்புறுதி போன்ற துறைகளை கவனிப்பர்.மீதமுள்ள 39 நபர்களும் ஒவ்வொரு துறைகளுக்கும் முக்கிய உதவியாளர்களாக பதவி வகிப்பர். மீதமுள்ள 154 உறுப்பினர்களும் இணைந்து 8 உறுப்பினர்களை நாட்டை ஆள்வதற்கு தெரிவாக்கம் செய்கிறார்கள். இவர்களில் ஒருவர் சுவிஸின் மிக முக்கிய பதவியான *பிரதம செயலாளராக(Federale Chancellerie)* நியமனம் பெறுகிறார்.

மீதி 7 நபர்களும் மந்திரிகளாக நியமனம் பெற்று, இவர்கள் இணைந்து சுழற்சி முறைமையில் ஒவ்வொரு வருடமும் ஒருவரை நாட்டின் சனாதிபதியாக தெரிவு செய்கிறார்கள்.நடப்பாண்டான 2025 ன் சனாதிபதியாக திருமதி.”Amtierend Karin Keller Sutter” பதவி வகிக்கிறார்.2026ம் ஆண்டின் சனாதிபதியாக திரு.”Guy Parmelin” பதவி வகிப்பார்.
*உலகில் 7 மந்திரிகளைக் கொண்டு சிறப்புற நாட்டை ஆளும் ஒரே ஓர் நாடு சுவிஸ் மட்டுமே.!*
இதையும் தாண்டி உலக நாடுகள் போலல்லாது’ சுவிஸின் சனாதிபதிக்கோ+ மந்திரிகளுக்கோ அல்லது பா.மன்றுக்கோ மிக முக்கிய தீர்மானங்களை நிறை வேற்று ம் அதிகாரம் கிடையாது.அப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதாகில்` மக்களிடம் கருத்துக்கணிப்புக்கு செல்லல் அவசியம்.
^மக்கள்தான் நாட்டின் எசமானர்கள். அதாவது முடிவெடுப்பது மக்களே.^
தமிழ்ப்பெண்ணான செல்வி.’Farah Rumy’ சுவிஸ் கூட்டாட்சி பா.மன்றின் கீழ் இயங்கும் கீழ்ச்சபை உறுப்பினர்களின் (Conseil National)125 வாக்குகள் பெற்று *2027 ன் தேசிய சபையின் உப.தலைவியாக 01.12.25ல் தெரிவாகியது, சுவிஸ் வாழ் தமிழருக்கு பெரும் மகிழ்வே.
“Farah Rumy” Solothurn (solo) மாநில Grenchen SP(Parti Socialiste) கட்சியை சேர்ந்த இளம் உறுப்பினராவார்.Solo Gerlafingen ல் திரு.க. சுதாகரன் அவர்களும் SP கட்சியில் உறுப்பினராக விளங்குகிறார்.மேலும் Aargau மாநிலத்தில் திருமதி.கிருஷ்ணதாஸன். தீபிகா.SP கட்சியில் இணைத்தலைவராக விளங்குகிறார்.மேலும் சில எம்மவர்கள் சில அரசியல் கட்சிகளில் அங்கத்தும் வகிக்கிறார்கள்…
“மாநகர உறுப்பினர்களாக Bern Zollikofen ல்-திரு.மூர்த்தி. தர்ணன்,Lausane மாநிலத்தில்-திரு.க.நமசிவாயம்,Thurn உறுப்பினராக- திருமதி.வடிவேலு.தர்சிகா, St.Gallenல் இருந்து- பா.மன்ற ஆலோசகராக திரு.துரை.ஜெயக்குமார் ஆகியோர்கள் தெரிவானார்கள்.”
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா.

