ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்) ஓவியங்கள்

முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) ஆவார். எழுபதுகளிலேயே கனடாவுக்குப் புலம்பெயர்ந்து நிறுவனமொன்றில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். 01.08.2020 காலமாகிவிட்டார்.
இவர் அக்காலகட்டத்தில் வெளியான வெகுசன இதழ்களில் வெளியாகிக்கொண்டிருந்த ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களைப் பார்த்ததின் விளைவாக ஓவியத்தில் ஆர்வம் கொண்டு தானும் அழகாக ஓவியங்களை வரைந்து கொண்டார். கனடாவின் பொருளியல் வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் பெரிதாகத் தனது ஓவியத் திறமையில் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் பொழுதுபோக்குக்காக இவரது கவனம் ஓவியத்தின்பால் ஈடுபடத்தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *