Blog

இணையத்தளங்களை ஏதேச்சாதிகாரமாக முடக்குதலும் பதிவு செய்தலும்:

இலங்கை தொடர்பான அல்லது இலங்கைமக்கள் தொடர்பான உள்ளடக்கங்களைத் தாங்கிவரும், இலங்கையிலிருந்து அல்லது வேறு எங்கேயும் இருந்து பதிவேற்றம் செய்யப்படும், அனைத்துஇணையத்தளங்களும், அங்கீகாரத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டுமெனகேட்கப்படுவது குறித்து, கீழே உள்ள சிவில் சமூக நிறுவனங்களாகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Read More

‘ஆதமின்டே மகன் அபு’

மாதவி ராஜ் (அமெரிக்கா) உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை.சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஒஸ்கார் விருதுக்கும்  பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம். ‘ஆதமின்டே மகன் அபு’

Read More

போதிமரத்தின் நிழல்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) சோதனைகளும் பயமும் வரும்போதும் நிராதரவான நிலையை உணரும்போதும் அதிலிருந்து தப்பிப்பதற்கு ஏதோ ஒன்றை நாடிச் செல்வது இயல்பு. நம்மீதுள்ள நம்பிக்கை குறைகின்றபோது வேறொன்றின்மீது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஓர் பாதுகாப்பான நிழல் கிடைத்தால் அதில் ஐக்கியமாவதைத்தான் மனசும் விரும்பும். ஆனால் …

Read More

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

காலம் இதழின் ஆதரவில்  ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை கனடாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை காலம் சஞ்சிகை …

Read More

இவ்வருடத்தில் 7000 சிறுவர் துஷ்பிரயோகம் –

சந்தியா (யாழ்ப்பாணம்) இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இந்த வருடம் கிடைத்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்த தந்தைகள், பாதுகாவலர்கள், அறிந்தவர்கள் ஆகியோரினாலேயே அதிகளவிலான துஷ்பிரயோகங்கள் இச்சிறுவர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான  முறைப்பாடுகள்  கிடைத்திருப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு …

Read More

கலாசாரம் என்ற போர்வையில் மூடி மறைக்கப்படும் பெண்கள் தற்கொலைகளும் கொலைகளும்

– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு     யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பின்னரும் பெண்கள் விவகாரங்களுக்கென தனியான அமைச்சு ஒன்று இருக்கின்ற சூழலிலும் கூட பெண்களுக்கெதிரான வன்முறை கட்டுப்படுத்தலின்றி நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் …

Read More

“பாமாவின்” மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய நெடி

நன்றி – தடாகம்— ச.அன்பு இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் …

Read More