மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 2

  நிகழ்வு 2 சமூகவியல்

DSC_0105 s

 

 

இந் நிகழ்வுக்கு எழுத்தாளர் வாணி சைமன் அவர்கள் தலைமை தாங்கினார்

 

 

DSC_0081sஇலங்கையில் போரின் பின்னரான நிலைமைகளில் மாற்றுத் திறனாளிகளில் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள வன்முறைகளை எதிர்கொள்ளல் மாற்றுத்திறனாளி என்பதனால் சமூகத்தால் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றை சந்திக்கும் ஓர் குழாமாக உள்ளனர். இப்பிரச்சினையானது நீண்ட கால போர் காரணமாக ஏற்பட்டதன் தாக்கம் என்பதனை உணர்ந்து போர்க்காலத்தின் பின்னரான  நிலமை மாறி நல்லிணக்க செயல்பாடுகளில் இவர்களது பிரச்சினைகளை கூடுதலாக தீர்மானிக்கபடுடதல் வேண்டும். இலங்கையில் 2012ம் ஆண்டின் குடித்தொகை தரவுகளின் படி 8.7 வீதம் மாற்றுத்திறனாளிகளாக உள்ளமை கணிக்கப்பட்டுள்ளது .மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் இக்கால கட்டத்தில் அவர்களது கல்வி,வேலைவாய்ப்பு வீட்டு வசதிகள் சுகாதாரம் போன்ற தேவைகட்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளையில் அவர்களின் பாலியல் தேவைகள, புறக்கணிக்கப்படுகின்றன. பாலியல் தேவைகள் தொடுகை உணர்வுகள் என்பன ஏனையவர்களுக்கு போல அவர்கட்கம் உண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது சரோஜா சிவச்சந்திரன் தன் கருத்தை முன் வைத்து பேசினார்.

 

IMG_1467s

 

அடுத்து  பெண் போராளிகள் என்ற தலைப்பில் பேசிய வெற்றிச்செல்வி மனிதர்களை மனிதராக நாம் முதலில் மதிக்கப்பழகிக் கொள்வோம் அதுவும் பெண்களை சக மனுசியாக மதிக்க கற்றுக்கொள்வோம் பெண்கள் தங்களுடைய உரிமைகளை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் அதுவும் போர் முடிந்த பின்னர் பெண்போராளிகள் தங்களால் இயன்ற வரை மன உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சிலரை விபச்சாரி என்கிறார்கள் இந்த சொல் ஒரு ஆணாதிக்க சொல்… நாம் சமூகத்தை மட்டும் குற்றம் சுமத்த முடியாது சமூகம் என்றால் யார் நாம் அனைவரும் சமூகமே எமக்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது .பெண்போராளிகளில் சிலர் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். பெண்போராளிகளை திருமணம் செய்ய யாரும் தயார் இல்லை அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை. எத்தனை பேர் அவர்களை திருமணம் செய்ய முன் வருகின்றோம். எங்களில் ஒருத்தியாக நாம் நினப்பதில்லை என தன் கேள்விகளை எம் முன் வைத்தார் அவரின் கேள்விகள் நியாயமானவை நாமும் எமது சமூகமும் இவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பெண் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தினூடகவே மேம்படுத்த முடியும் மாற்றுத்திறனாளிகளுக்காக அதுவும் இலங்கை முழுவதும் உள்ள பெண் மாற்றுத்திறனாளிகளுக்காக சில பஸ்களை பெற்றுக்கொள் இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார் வெற்றிச் செல்வி

 

 

DSC_0100sஇவரை அடுத்து நளினி பேசுகையில் போருக்குபின் பெண்களின் நிலை என்ற தலையங்கத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை முதலீடுஆக்கி அதை வைத்து அரசியல் செய்வதும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். போரை வடிவமைப்பதும் நடத்துவதும் ஆண்களாகவே உள்ளனர் ஆனால் பாதிக்கப்படுவது பெண்களே போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை பொருளாதாரத்தினால் கட்டியெழுப்ப நாம் முன்வருவதில்லை இவ்வாறான போரால் பாதிக்கப்பட அடிப்படை சமூக பொருளாதாரத் தேவைகளை முதன்மைப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை… எல்லா ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அனைத்தும் பெண்களை பாவித்தார்கள்… ஆனால் போர் முடிவடைந்த நிலையில் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள்…போரிலிருந்து தப்பிப் பிழைத்தோர் இன்றும் கூட தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். என அடுத்த தலைமுறையினருக்கும் இவைகள் எடுத்துச்செல்லப்படுகின்றன.என தனது கருத்துக்களை கூறினார்.

 

 

DSC_0118s

 

மலையகத்திலிருந்து பங்கேற்ற விஜயகுமாரி பேசுகையில் தனித்துவாழும் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்பது உறவுகள் ரீதியாகவம் கொள்கைகள்ளாலும் தனித்துவிடப்பட்டுள்ளனளனகணவனையிழந்ததோர் காணாமல் ஆக்கப்பட்டோர் விவாகரத்து பெற்றோர் என குடும்ப சூழ்நிலை காரணம் பெண்போராளிகளை காணமல் போனோர் காணமல் ஆக்கப்பட்டோர் திருமணம் அவர்கள் ஒதுக்கப்படார்களா சமூகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளனரா வடகிழக்கு சாஸ்திர கலாச்சார உடல் உள ரீதியாக குடும்ப பெண்களை விட தனித்து வாழும் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர். வாhத்தை பிரயோகங்களும் ஆண்துணையில்லாமல் தனித்துவாழும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு சுய தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் பெண்களுக்கு கல்வி வேண்டும் என தனது கருத்துக்களை தெரிவித்தார்..

அவர்களின் பேச்சுக்களை கேட்க இவ்வீடியோவை அழுத்தவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *