ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு

பௌந்தி (நன்றி ,ஜீவநதி)

avaai

avvai 21avvai 3980 களில் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பெண்எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆழமாகத் தடம் பதிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றித் தாமே எழுத முற்பட்டமையால் அவை முக்கியத்துவமுடையனவாக நோக்கப்பட்டன. பெண்களது படைப்பாளுமை ஆரம்பத்தில் கவிதைத் துறையிலேயே முனைப்பாக இடம்பெற்றன எனலாம். அந்தவகையில் கவிஞர் ஒளவையின் பிரவேசமும் குறிப்பிடத்தக்கது. இலங்கை இனப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்ற சூழலில் பெண்கள் தம்மையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளத் தொடங்கினர். இந்நிலை பெண் விடுதலை பற்றிய சிந்தனையில் முற்போக்கு நிலையை ஏற்படுத்தியிருந்தது என்றேகூறலாம். இக்கருத்துக்கள் இலக்கியங்களிலும் பிரதிபிலிக்கத் தொடங்கின. அதேவேளை தமிழின அட க்கு முறைகளும் அதனால் மக்கள் சந்தித்த பிரச்சினைகளும் இளம் சமுதாயத்தை வெகுவாகப்பாதிக்கத் தொடங்கியிருந்தன. இந்தப் பாதிப்புக்களும் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டன.கவிஞர் ஒளவையும் இப்பின்னணியிலேயே கவிதையுலகில் பிரவேசிகக் கின்றார்.கிராமப் பகுதி ஒன்றில் பிறந்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்விஞ்ஞானமாணிப் பட்டத்தைப்பெற்றுக்கொண்டவர். அவரது வாழ்க்கைப் பின்னணியும் கல்வியும் கவிதைத்துறையில் அவரது ஈடு பாட்டை அதிகரித்திருந்தன என்றே கூறலாம்.

ன் கவிதை எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் பெண்ணியம் சார்ந்த கவிஞராகவே அறிமுகமாகியிருந்தார். அந்த அடிப்படையிலேயே ஆய்வாளர்களாலும் நோக்கப்பட்டு வருகின்றார். ஆனால் அவரது கவிதைகளில் பல போர்க்காலத்தில் ஏற்பட்ட வலிகளின் உணர்வுப் பதிவுகளாக இடம் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.பெண் கவிஞர்கள் பலர் இலங்கைத் தமிழ் கவிதையுலகில் தமது இருப்பை அடையாளப்படுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது அந்தவகையில் ஒளவையும் குறிப்பிடத்தக்கவர். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான கவிதைகளை எழுதியுள்ளபோதும் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அவர் பாடியுள்ளார். போராட்ட காலத்தைப் பற்றி கவிஞர்கள் பலரும் எழுதிக் குவித்துள்ளனர். அந்தவகையில் ஒருபெண் கவிஞராக உள்நாட்டு யுத்தத்தின் பல்வேறு பரிமாணங்களையும்நேரில் அவதானித்தவராக ஒளவையின் கவிதைகளிலும் அவை பதிவாகியுள்ளமையைக் காணலாம். ஒளவையினுடைய கவிதைகள் பற்றி பலரும் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளபோதும் ஆய்வு அடிப்படையில் அவை நோக்கப்பட வில்லை.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்தாடல்களும் அவரை ஒரு பெண்ணியத் தளத்துக் கவிஞராகவே நிறுவ முற்படுகின்றன. ஈழத்து எழுத் தாளர்கள் பலரையும் வெகுவாகப் பாதித்த போராட்ட வடுக்கள் ஒளவை என்ற படைப்பாளியையும் பாதித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. அந்தவகையில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பது ஆய்வு செய்யப்படவேண்டியதாகின்றது. செய்யப்படவேண்டியதாகின்றது. கவிஞர் ஒளவையின் கவிதை கவிஞர்ஒளவையின் கவிதை களில் மேற்கிளம்புகின்ற போர்க் காலத்தின் உணர்வுப் பதிவுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. ‘எல்லை கடத்தல’;என்ற அவரது கவிதைத் தொகுதி முன்னரேவெளிவந்துள்ளபோதும் அதில் இடம் பெற்றுள்ள கவிதைகள் எல்லாம் அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘எதை நினைந்தழுவதும்சாத்தியமில்லை’என்பதில் இடம் பெற்று உள்ளன. எனவே, அந்தக் கவிதைத்தொகுதியை அடிப்படைiயாக கொண்டு போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பது ஆய்வு செய்யப் படுகின்றது.

போர் ஏற்படுத்திய வலிகள்,வடுக்கள் தமிழ் மக்களை மட்டுமின்றிசிங்கள, முஸ்லிம் மக்களையும்பாதித்துள்ளன. போராட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இலங்கைக் கவிஞர்கள் பலரும் பாடியுள்ளனர். அனுபவ உணர்வின் பதிவுகளாக பல கவிதைகள் இடம்பெறுவதை அவதானிக்கலாம். அந்தவகையில் ஒளவை என்ற பெண்கவிஞர் போராட்ட காலத்தில், தனதும் தான் வாழ்ந்த சமூகத்தினதும் உணர்வுப் பதிவுகளை எவ்வாறு பார்க்கின்றார், பாடுகின்றார் என்பதை ஆயவு; செய்ய வேணடியதாக உளள்து. போராட்டத்தின் பின்னணி,தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் காட்டிய அக்கறையும் அதற்கான பின்னணியும், போராட்டத்தினால் ஏற்பட்ட பலவேறு இழப்புக்கள், இந்திய இராணுவத்தின் வருகையும் அதனால் மக்கள் சந்தித்த அவலங் களும், விமானக் குண்டு வீச்சு, இடப் பெயர்வு, புலப்பெயர்வு என போராட்டகாலத்தின் உணர்வுகளை கவிஞர் ஒளவை தனது கவிதைகளின் பாடுபொருளாக எடுத்துக் கொண்டுபதிவு செய்கிறார் என்பதை நோக்க வேண்டிய தேவை எழுகின்றது. ;அதாவது போர்க்காலத்தின் உணர்வுகள் தொடர்பாக ஒளவையின் படைப்புளவியலை நோக்க வேண்டியது அவசியமானதாகும்.இலங்கையின் பிரச்சினை தொடர்பாக அவரது கவிதைகளில், என்னென்ன விடயங்கள், எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதும் அவற்றுக்கான பின்னணி என்ன என்பதும் இங்கு விமர்சன அடிப்படையில் நோக்கப்படுகின்றது.

ஒளவையின் கவிதைகளில்

போர்க்கால உணர்வுகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது பின்வரும் ஐந்து தலைப்புக்களின் கீழ் பகுத்தும் தொகுத்தும் ஒப்பிட்டும் வியாக்கியானம் செய்யப்படுகின்றன.

1. போரூக்கம்
2. போரின் மீதான நம்பிக்கை இழப்பு
3. இடப்பெயர்வும் புலப்பெயர்வும்
4. போரின் மீதான வெறுப்பு
5.சமாதானத்தை நேசித்தல்

போரூக்கம்

இலஙகையில  இனபபோராடடம ; போராட்டம் பற்றி நோக்குகின்ற போது, ஆரம்பத்தில் மிதவாதிகளிடமிருந்த போராட்டம் 1970 களின் பின்னரைப் பகுதியிலிருந்து தமிழ்இளைஞர் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட சூழலை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு விடுதலைகிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பல இளைஞர் குழுக்கள்தோற்றம் பெற்றன. அவ்வாறுதோற்றம் பெற்ற இளைஞர் குழுக்கள் 1980 களின் ஆரம்ப காலப்பகுதியில் விடுதலை என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்துக்கும் அரச இயந்திரம் என்று கூறப்படுகின்ற இராணுவத்துக்கும் எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. ஆரம்ப காலத்தில் கரந்தடி (மறைந்திருந்து தாக்குதல்) முறையிலேயே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் தமிழ்மக்கள் அனுபவித்த துன்பங்கள் இப்போராட்டத்திற்கு வலுச் சேர்த்தனஎன்றே கூறலாம். அடிமை வாழ்வைப்போக்க ஆயுதம் ஏந்திப் போராடப்புறப்பட்ட இளைஞர் குழுக்களில்சேர்ந்துகொள்வதில் இளைஞர்கள்மட்டுமின்றி யுவதிகளும் அதிக அக்கறை காட்டினர்.

பிரசாரங்களுக்கு இலக்கான இளைஞர்,யுவதிகள் இனத்தின் மீது கொண்டபற்றினாலும் இயந்திரத் துப்பாக்கிகளை அனுபவிக்க வேண்டும் என்றஅவாவினாலும் வேறு காரணங்களினாலும் தம்மையும் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர். வீட்டை விட்டு புறப்பட்ட இளைஞர்கள் தனியாகவும் குழுக்களாகவும் பெற்றோர் அறியாமலேயே தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.’சொல்லாமல் போகும்புதல்வர்கள்” என்ற கவிதை இளைஞர்கள் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு தூண்டியாக இருந்த உசாவல்களையும் பெற்றோரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. தாயொருத்தியின் நெஞ்சோடு கிழத்தலாக விரியும் அந்தக் கவிதை
யின் வரிகள் போராட்டத்தில் இளைஞர்கள தம்மை இணைத்துக் கொண்டு நின்ற சூழலை காடடி நிற்கின்றன.

“முழு நிலவு பூத்து
நட்சத்திரங்கள் தெறித்திருக்கும்
இரவுகளில்
மஞ்சளாய் சணல்
பூத்து விரிந்திருக்கும் எம் வயலில்
காற்று வாங்கியபடி
அவனும் நானும்
தனித்திருக்கையில்
ஒரு நாள் அவன் கேட்டான்
அப்பா ஏன் இறந்தார்?
யுத்தம் ஏன் வருகிறது?
அக்காவுக்கு ஏன் தலை நரைத்து
விட்டது?
அன்று சின்னப்பயல் அவன்
மகனே!
ஆந்தைகள் அலறும் இரவுகளும்
விமானங்களின் குண்டு வீச்சும்
நெஞ்சைப் பிளக்கும்
அவலங்களும்
இங்கு நிறையவே நடக்கும்.”

இவ்வாறு பெற்றோருக்குத் தெரியாமல் போய் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பிள்ளைகளை பெரும்பாலும் பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்கவில்லை. எனினும், தமது பிள்ளைகளுக்கு நேரக்கூடிய ஆபத்துக்கள், அழிவுகளை நினைத்து அவர்களால் வருந்தமாலும் முடியவில்லை. பெற்றோரின் இந்த இருதலைக்கொள்ளி நிலையை அதே கவிதையில் வருகின்ற பின்வரும் வரிகள் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

 “இராணுவ வெறியரிடம்
அகப்படாதே!
கவனம் அதிகம் தேவை
அதைவிட மேலாக எமக்குள்
நூறு எதிரிகள்.
மக்களை நேசித்த
சின்னப் பயல்களெல்லாம்
இன்று மண்ணுள்
மகனே
சிட்டுக் குருவி போலத்தான்
பறந்தாய்!
ஆயினும்
காலம் உன்னை
வளர்த்திருக்கும்
மனித நேயத்தை இழநது; விடாதே
மக்களை அதிகம்; நேசிக்க பழகு”

 ஒரு தாயின் அறிவுரை கூறலாக அமையும் இந்த வரிகளில்போராட்ட காலத்தின் முக்கிய உணர்வுப் பதிவுகளை நாம் அவதானிக்க முடியும். போராட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள் இணைந்து கொள்வதற்கு காரணமாக அமைந்த வாழ்வியற் சூழல், போராட்டத்தில் இணைந்த பிள்ளைகளை பெற்றோர் வெறுத்து ஒதுக்காமை, பிள்ளை களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பெற்றோரின் பயம் காட்டிக் கொடுப்புக்களால் ஆபத்து ஏற்படும் என்ற சூழல் இவற்றையெல்லாம் தாண்டி மனித நேயத்தோடு மக்களை நேசிக்க வேண்டும் என்று தாயின் எதிர்பார்ப்புணர்வு ஆகிய போராட்டகால உணர்வுப் பதிவுகள் பல இந்தக் கவிதையில் விரிகின்றன. ஆண்பிள்ளைகளிடம் மட்டுமின்றிப் பெண்பிள்ளைகளிடமும் போராட்ட உணர்வு விரைவாகவே தொற்றிக் கொண்டது. பெண் பிள்ளைகளும் போராட்டக் குழுக்களுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். அச்சமும் ஆபத்தும் நிறைந்த வாழ்க்கைச் சுமையை அனுபவிக்க அவர்கள் தயாராக இல்லை. துர்க்கை போன்ற பெண் தெய்வங்களை ஆயுதமேந்திய கோர வடிவாகக் காட்டிவிட்டு பெண் பிள்ளைகளை வீட்டினுள்ளே அடக்கி வைக்கும் சமுதாயத்தை நோக்கி அவர்கள் கேள்விகேட்கத் தலைப் பட்டனர் . சுதந்திரம ற் ற வாழ்வை நிராகரித்துப் போராடத் தலைப்பட்டனர். ‘போகின்றேன், அம்மா எனற் கவிதை இதறகு; சிறநத் எடுத்துக்காட்டாக அமைகின்றது.

“பெண்ணென்று சொல்லி என்னை
பூட்டியா வைக்கின்றாய்
இச்சிறு வீடும் கிடுகு வேலியும்
நகையும் உடையுமா எனது
வாழ்க்கை?
அம்மா!
எனது வசந்தங்கள்
பறிபோய் விட்டன
இனிய காதல் இரவுகள் கூட
சொந்தமின்றி வீணே
நகர்கின்றன.”

மரபுவழிப்பட்ட சமுதாயத்தின் எண்ணவோட்டங்களை அனுசரித்துக்கொண்டு வாழமுடியாத பெண் சமுதாயம் இக்காலப் பகுதியில் புதிதாகக் கனவுகாணத் தலைப்பட்டது. இந்த இடத்தில் கவிஞர் ஒளவை பெண்ணியத் தளத்தில் நின்று போராட்டத்தை நேசிக் கின்றார். மக்களின் விடுதலைக்காகப் போராடுவதில் பெண்கள் கொண்டிருந்த ஆர்வத்தை அவரது கவிதை வரிகள் உணர்த்துகின்றன.

ஏன்று தாய்  மண் ணை விட்டுப் பிரியும் வலியைப் பாடுகின்றார். தான் வாழ்ந்த மண்ணை, தான் சுவாசித்த காற்றை, ஓடியாடி விளையாடிய வயல் வெளியை, பனங்கூடலை என எல்லாவற்றையும் பிரிந்து செல்வதான இடப்பெயர்வின் வலிகளை வருத்தின வாழ்வாதாரத்தை இழந்து செல்லும் அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பெயர்வை மிகுந்த வலியாக உணர்ந்தனர். தமது சுயத்தை இழந்து போவதாக எண்ணி ஏங்கினர்.
“…………………………….
காற்றுக்கும் காதிருக்கும்
கதறி அழ முடியாது
சோகம் தான்
விடுதலைப் பாதையில்
நடக்க முனைந்ததால்
முடமாக்கப்பட்டு
கள்வரைப் போல
அடிமேல் அடியெடுத்து
மெல்ல நடந்தேன்
எனது கிராமத்து வயல் வெளியும்
வயல் வெளிக்குத் துணையாக
உடன் துயிலும் இருளுக்குள்
நீண்டிருந்த பனைகளும்
கடுங் கோபங்கொண்டு
எனை வெறித்துப் பார்த்தபடி
வெற்றுத் தாளாய்
காற்றோடு பறந்தது இதயம்
இருளோடு பறந்தது முகம்
இன்னும் என் கால் மட்டும்
என்னோடு கூட”

என நீள்கின்றது அந்தக் கவிதை. இருப்பை நிலைநாட்ட வென்று தொடங்கிய போராட்டத்தின் விளைவுகள் ஒப்பீட்டளவில் சிறுபான்மை மக்களையே அதிகம் பாதித்தன. தொடக்க காலத்தில் யாழ்ப்பாண மக்களே இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து தொலை தூரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். மண்ணின் இருப்புக்காகப் போராட முற்பட்ட மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்த அனைத்து உடமைகளையும் இழந்து ஏதிலிகளாகப் புறப்பட்டனர். தாம் வாழ்ந்த, தம்மை வாழ வைத்த மண்ணைப் பிரிகின்றோமே என்ற வலிகளோடு பெயர்ந்து சென்றனர்.
“……………………..
மணற்காட்டு வெளியையும்
புதுக்காட்டுச் சந்தியையும்
தாண்டிக் குளமும் தாண்டி
நீள நடந்தேன்
குனிந்த தலை நிமிரவில்லை
எனது மண்ணில்
நிச்சயமற்றுப் போய் விட்ட
எனது இருப்பை
உறுதிப்படுத்த
பிறந்த மண்ணின்
எல்லையைக் கடந்தேன்
இறுதியாக
பாதங்களில் ஒட்டியிருந்த
செம்மண்ணையும்
தட்டியாயிற்று
செம் மண்ணும் போயிற்று
எம் மண்ணும் போயிற்று போ”

என்பதில் இறுதியாக உள்ள வரிகள் கவிதையின் உண்மை உணர்வைப் பதிவுசெய்துள்ளன. எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதவர்களால் இடப் பெயர்வுக்காக நிர்ப்பந்திக்கப்பட்டு நிர்க்கதியாக்கப் பட்டதன் வலிகளாக இந்த வரிகள் அமைகின்றன. இவை அனுபவத்தின் பதிவுகள். ‘காலத்தை வெல் வாயோ?”, ‘கலியாணம்” ஆகிய கவிதைகளும் போராட்டத்தினதும் புலப்பெயர்வினதும் பதிவுகளாகவே பாடப்பட்டுள்ளன. போரின் மீதான வெறுப்பு 1990 லிருந்து உக்கிரமடையத் தொடங்கிய போராட்டத்தினால் இளைஞர், யுவதி கள் பலர ; இறந்து போயினர் போராட்டம் அவர்களைத் தின்று தீர்த்திருந்தது. வாழ்தலுக்கான போராட்டம் என்ற நிலையில்  தொடங்கியிருந்தாலும் அது நாளடைவில் இளம் சமுதாயம் ஒன்றை அழித்துக் கொண்டிருந்தது. ஆரம்பகாலத்தில் ; போராட்டத்தை ஆதரித்தவர்களில் பலர் அதை வெறுக்கத் தொடங்கினர். குறிப்பாக போராட்டத்தில் தமது பிள்ளைகளை இழக்கவிரும்பாத பெற்றோர்கள் பலரம் ; வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் யுத்தத்தை வெறுப்பதுதவிர்க்க முடியாதது . நிண வாடையைய எங்கும் பரப்பி இரத்தத்தையும் தசையையும் எஞ்ச வைத்த போராட்டத்தின் வடுக்களைச் சுமந்த மக்கள் அதனை வெறுபப்தெனப்து தவிரக்க் முடியாதது.ஒரு தான் தான் ;வாழும் தாய் ; மண்ணை முன்னிறுத்தி வினாவுவதாக அமைந்த ‘தாயின் குரல்” என்ற கவிதையில் போரின் உக்கிரத் தன்மையையும் போர் சப்பித் துப்பிய வாழ்வையும் வடுக்களையும் வலி களையும் கவிஞர் ஒளவை பதிவு செய்துள்ளார்.

“கொலையுண்டு போன
எம் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப் பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னும் தாய் நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?
போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும்
கேட்காதே
இரக்கமற்ற ‘தாய் நிலமே’
கொல்லப்பட்ட என்
புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை
துப்பாக்கி அரசர்கள்
சிம்மாசனம் ஏற
யுத்த வெறியில்
புதல்வர்கள் அலைந்தனர்.

இன்னுமா ‘தாய் நிலம்”
புதல்வர்களைக் கேட்கிறது?
கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக,
எத்தனை குஞ்சுகளை
விழுங்கிவிட்டாய்
இன்னும் அடங்காதோ உன் பசி?
விண்ணேறி மண்தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!
என் மழலைகளை விடு
நாளை உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்”

இலங்கையில் ஏற்பட்ட தமிழ்ப் போராட்டத்தின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை ஒளவை யினுடைய மூன்று கவிதைகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற போது இலகுவாக விளங்கி கொள்ள முடியும். ‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்” என்ற கவிதையில் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து ஏற்றுக்கொண்டு தன்மகன் அதில் இணைந்து கொண்டமையை ஏற்றுக்கொண்டு புத்திமதி கூறும் தாய்இ ‘வீடு திரும்பிய என் மகன்” என்ற கவிதையில் போராடச் சென்ற மகன் இராணுவ வீரனாய் ஆயுதத்தோடு வீடு திரும்பியபோது சகோதரப படுகொலையின் பின்னணியில் அவனைச் சந்தேகத் தோடும் வெறுப்போடும் நோக்கு கின்றாள். போராட்டத்தின் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டு இழப்புக் களே அதிகம் என்றான போது எந்தத்தாய் மண்ணைக் காக்க புதல்வர்களை அனுப;பினாயோ அந்த மண்ணிடமே ஒரு தாய் கேள்வி கேட்பதாகஇ நியாயம் கேட்பதாகஇ போராட்டத்தையும் அதன் அழிவு களையும் வெறுப்பதாக ‘ஒரு தாயின் குரல்” என்ற கவிதை அமைந்துள்ளது. தனது பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து என்ற தவிப்பும் தனது பிள்ளைகளால் மற்றவர்களின்உயிருக்கு ஆபத்து என்ற துடிப்பும் போராட்டத்தின் மீதான நியாயங் கேட்டலை ஏற்படுத்தியிருப்பதை அவரது கவிதைகளினூடே தரிசிக்க முடிகின்றது.

சமாதானத்தை நேசித்தல்

இழப்புக்களையும் அழிவுகளை மட்டும் எஞ்சு பொருளாக்கிய போராட்டத்தின் மீது மக்கள் பலருக்கு ஆத்மார்த்தமாக வெறுப்பு ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது . அதனால் போர் நிறுத்தங்களும் அமைதிப் பேச்சு வார்த்தைகளும் சொந்த நிலத்துக்குத் திரும்பக் கூடிய சூழலும் ஏற்பட்டபோது மக்கள் மகிழ்வோடு அதனை வரவேற்றனர். அந்தச் சூழலை வாழ்தலுக்காகச் சமாதானம் அனுப்பிய சந்தர்ப்பமாக நோக்கினர். 1990 களின் நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட யுத்த தவிர்ப்பு மக்களின் மனங்களில் ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது என்பதில் சந்தேக மில்லை .போர் மக்களுக்கு கொடுத்த வலிகளும் போருக்காக மக்கள் கொடுத்த விலைகளும் அதிகம் என்பதால் சமாதானத்துக்கான சிறு சமிக்ஞை கூட மக்களிடத்தில் மகிழ்வோடு கூடிய பல வினாக்களை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக நடைபெற்ற போரின் பின்னர் அவர்கள் தமது வாழ்வைத்திரும்பிப்பார்த்த போது இழப்புகளும் உயிரழிவுகளுமமே எஞ்சியிருந்தன.1995 இல் எழுதப்பட்ட ‘மீள் வருகை 1″ மற்றும் 2003 இல் எழுதப்பட்ட ‘மீள் வருகை 2″ ஆகிய கவிதைகள்இ இடப் பெயர்வு புலப்பெயர்வுகளின் பின்னர் சொந்த மண்ணுக்கு மீளும் ஒருசராசரி மனிதனின் ஏக்கங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பதிவு செய்துள்ளன. இருவேறு காலப்பகுதியிலும் இலங்கையில் ஏற்பட்ட யுத்த நிறுத்த காலத்தில் சிலருக்கு தமது சொந்த மண்ணுக்கு வந்து மீளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ‘மீள் வருகை 1″ என்ற கவிதை போரவலங்களையும் அவற்றின் மத்தியில் தமிழ் மக்கள் மீளுயிர்ப்புக்குத் தயாராயிருக்கும் சூழலையும் சித்திரிக்கின்றது.

“நீண்ட போருக்குப் பிறகு
அமைதி கிடைத்திருக்கின்றது.
யுத்தப் பேரொலியும் மரண
ஓலங்களும்
நின்று போய்விட்ட
அமைதி.

யுத்தம் எதனைச் சாதித்தது?
இந்த அமைதி
எதனைச் சாதிக்கப் போகிறது?
கேள்விகளாக நகர்கிறது வாழ்வு.
எமது ஊர் மக்களை இழந்தது.
எமது மக்கள்
ஊரை இழந்தனர்
மிரண்டு ஓடியும் மிரட்ட ஓடியும்
அநாதைகளாக
உலகெங்கும் சிதறினர்.
என்றென்றைக்குமாய் எமது
மண்ணின்
வாழ்வை இழந்தனர்…
அணைந்த ஊழித் தீயின்
சாம்பல் தெருக்களில்பறக்கிறது.
ஆயினும்
மீண்டும் அங்கே
ஆளரவம் தெரிகிறது.
கோவில் மணி மெல்லத் தனித்து
ஒலிக்கின்றது.
எமது கிராமம் மீண்டும்
உயிர்க்கிறது.
இயந்திரம் துப்பிய சக்கைகளாக
மக்கள் திரிகின்றனர்.
துப்பாக்கி வாழ்வைத் தருகிறது
என்றார்கள்
அப்படியானால்
அவலம்… மரணம்…
துயரம்..?

தொடர்ச்சியான போரினால் மக்கள் மனதில் ஏற்பட்ட ஏக்கத்தின் வார்த்தைகளாக போர்க்காலத்தின் உணர்வுகள் ஒளவையின் கவிதைகளில் ஒலிக்கின்றன. இலங்கையில் போராட்டம் தொடங்கிய காலத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து கவிதை எழுதிய கவிஞர், போராட்டம் கொடுத்த கசப்பான அனுபவங்களின் பின்னர் அதே போராட்டத்தை வெறுத்துப் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். நிலபுலம், அதன் மீதான உரிமை, உழைப்பு, ஓய்வு அனைத்தையும் போராட்டம் உறிஞ்சிக் கொண்டதால் மக்கள் மனங்களில் தமது இருப்பு, மண் பற்றிய ஏக்கங்களே அதிகம் காணப் பட்டன. ‘மீள் வருகை 2″ என்ற அவரது கவிதை, சொந்த மண்ணுக்குத் திரும்பிய ஒரு பெண்ணின் ஏக்கங்களாக அமைந்துள்ளது.
“……………………………
பற்றைகள் மூடிய வீதிகளும்
வீடுகளும்தலை முறிக்கப்பட்ட பனைகளும்
மிதிவெடிகள் நிரம்பிய
வயல்வெளிகளும்
மௌனமாகக் கடந்த கால
போரின் அவலத்தைச் சொல்லி
அழுதன.
எத்தனை அவலம்
எத்தனை இழப்பு
உயிர் தரும் எதனையும் காணோம்
புதுக் கதிர்கள் விரிந்து
பால் மணம் பரப்பும்
வயல்வெளியும்
நெற்கதிர்கள் சலசலக்க
வீசும் வயற் காற்றும்
துயில் கலைக்கும் கோயில்
மணியோசையும்
எங்கே தொலைந்தன?
கட்டை அடித்து கவிதை சொலலும்
எம் கிராமத்துக் காலை எங்கே?
நாதஸ்வர ஓசை எங்கே?
உயிர் தரும் எதனையும்
காணோம்.”

என்று தொலைந்து போன வாழ்வின் தேடியேங்கும் சராசரி ஆத்மாவின் குரலாக அமைகின்றது இந்தக் கவிதை. இங்கு கவிஞர் தான் வாழ்ந்த நிலத்தின் பண்புகளை வார்த்தைகளுக்குள் வசப்படுத்தியிருப்பதைக் காணலாம். கிராமத்துச்
சூழலையும் அந்த வாழ்க்கை முறையையும் மகிழ்வோடு நினைந்தழும் ஏக்கம் வெளிப்படுகின்றது.  போராட்டத்தின் வலிகளைச் சுமந்து நொந்துபோன தமிழ் சீவன் ஒன்றின் ஆத்மாவாக ஏக்கமாக இக்கவிதை அமைந்து உள்ளது போராட்டம். தமது இருப்பின் எச்சங்களை எட்டிப் பார்ப்பதற்கு வாய்ப்பளித்திருந்தமையை மக்கள் எவ்வாறு அனுபவித்துக் கொண்டனர் என்ற உணர்வை கவிஞர் இங்கு வெளிப்படுத்தியுள்ளார். 2 0 0 9 காலப்பகுதியில் ; ஈழத்தின் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காகவும் துயரங்களுக்காகவும் துடிக்கும் ஒரு சராசரி மனிதத்தின்குரலாக அவரது ‘மீதமாக உள்ளவாழ்வு” ‘அஞ்சலி” ஆகிய கவிதைகள் அமைந்துள்ளன. போராட்டத்தின் மதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் குற்றம் சுமத்துவதும் அதற்கான மூலங்களைத் தேடுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் ஏற்படப்போகும் பயனும் இல்லை. ஒருவரில் மற்றவர் குற்றம் சுமத்தி குறை கூறிக் காலத்தை ஓட்டுவதைக் காட்டிலும் வாழ்தலுக்கான வழியைக் கண்டுகொள்வதே முக்கியமானது. பயனுடையது என்பதை அவருடைய ‘எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை என்ற கவிதை போதிக்கின்றது.
“………………………
உனது பிழையா
எனது பிழையா
வரலாற்றுச் சாபமா!
………………………………….
எதையும் நினைந்தழுதல்
இப்போது சாத்தியமில்லை
மனிதத்தின் மீது நம்பிக்கை
கொண்டு
உயிர்த்தெழுதலே வாழ்வு!”

என்ற கவிதை வரிகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. போராட்ட கால வாழ்விலிருந்து மீண்டெழுதல் பற்றிய நம்பிக்கை மக்களுக்கு அவசியமானது என்பதை இவை உணர்த்துகின்றன. கழிவிரக்கத்தில் தோய்ந்து தோற்றுப் போகும் வாழ்வைக் காட்டிலும் நம்பிக்கையின் புசிப்பில் நகரவேண்டிய எல்லையை இந்த வரிகள் பதிவு செய்துள்ளன. நிறைவுரை 1980 களின் நடுப்பகுதியிலிருந்து இலங்கை தமிழ் கவிதைப் பரப்பில் தனது இருப்பை நிலைநாட்ட ப் புகுந்த கவிஞர் ஒளவை இதுவரை பல கவிதைகளை எழுதியுள்ளார். அவரது கவிதைகளின் தொகுப்பாக ‘எதை நினைந் தழுவதும் சாத்திமில்லை” முக்கியத் துவம் பெறுகின்றது. பெண்ணியம் சார்ந்த கவிஞராக பெரிதும் நோக்கப்பட்ட ஒளவை அது தவிர்ந்து தான் வாழந்த போராடட் காலத்து உணர்வுபதிவுகளாகவும் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். அந்தவகையில அவர் எழுதிய கவிதைகளை ஊடறுத்து நோக்குகின்ற போது அவற்றினூடே ஒரு வரலாற்றுத் தொடர்பைத் தரிசிக்க முடிகின்றது. கொள்கைப் பற்றோடு தான் நின்ற ஆரம்ப தளத்தையே ஆதரிக் கின்ற போக்கை விடுத்து போராட்ட காலத்தில் பெரும்பாலான மக்களின் மனங்களில் ஏற்பட்ட அதிர்வுகளின் அடையாளங்களாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன எனலாம். ஆரம்பக் காலப்பகுதியில் போராட்டத்தை ஆதரித்துக் கவிதை எழுதிய ஒளவை காலவோட்டத்தில் அந்தப் போராட்டத்தின் அநியாயங் களை தட்டிக் கேட்பதோடு அது தடம் மாறிப்போன திசையையும் பாடு பொருளாக்கியுள்ளார். போராட்ட கால வரலாறும் அது மக்கள் மனங் களில் ஏற்படுத்திய தாக்கங்களும் அவரது கவிதைகளின் ஊடுபொருளாக அமைந்துள்ளமையை அவரது கவிதைகளைப் படிக்கும் போது புலனாகின்றது. மக்கள் பக்கம் நின்று பக்கச் சார்பற்று அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலையும் நேர்மைத் தன்மையையும் அவரது கவிதை களினூடே நோக்க முடிகின்றது. புதுக்கவிதைக்கான அந்தஸ்து என பலரும் கருதும் குறியீடுகள் படிமங்களை பெருமளவில் அவரது கவிதைகளில் தரிசிப்பது சாத்தியமற்றுக் காணப்படுகின்ற போதிலும் ஒற்றை வாசிப்பில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய எளிமையான மொழியில் உணர்பனுபவங்களை கவிதையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கவிதைக்கான அழகியல் என்கின்றபோது தூக்கலான விடயங்களை அதிகம் தரிசிக்கமுடியாவிட்டாலும் அவரது படைப் புக்களினூடு அவர் சமூகத்தை நோக்குகின்ற விதமும் சமூகப் பிரச்சினைகளைப் பதிவு செய்வதில் மக்களின் பிரதிநிதியாக காட்டுகின்ற அக்கறையும் போராட்ட காலத்து உணர்வுப் பதிவுகளை கவிதைகளுக்குள் கொண்டு வருகின்றபோது பக்கச் சார்பற்று இயங்குகின்ற செம்மையும் வெளிப்படுகின்றன. எனவே கவிஞர் ஒளவை பெண்ணிய எழுத்தாளர் என்பதற்கு அப்பால் போராட்ட கால உணர்வுப் பதிவுகளாக அமைந்த கவிதைகளையும் எழுதியுள்ளவர் என்றவகையில் இலங்கைத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியத்துவம் பெறுகின்றார்.

 

1 Comment on “ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு”

  1. This is a detailed study of avvai, the poet. I just want to point out that feminism always functions in context . We should not theoretically feminism as a polarised ideology. Better to read her poems as feminist responses to the long struggle and huge loss.
    Mangai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *