ஒடுக்கப்பட்டவர்கள்- போர்க்கால கதைகள்

 

நன்றி யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்)

இரண்டு நாட்கள் எடுத்து மிகக் கவனமாய் படித்து முடித்த நம்மவர் படைப்புக்கள் தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” , தி.ஞானசேகரன் தொகுத்த “போர்க்காலக் கதைகள்“ என்பன. நம் சமூகம் சார்ந்த படைப்புக்களைப் படிக்கும்போது இயல்பிலேயே ஒரு சமூகபாசம் ஒட்டிக் கொள்ள படிப்பேன். அதற்கு காரணம் அப் படைப்புக்கள் நம் சமூக யதார்த்தப் பிரதிபலிப்பாக இருப்பதும் , நமக்கேயுரிய மொழிநடையில் அமைவதுமே.

தெணியானின் “ஒடுக்கப்பட்டவர்கள்” நூல் 25 சிறுகதைகளின் தொகுப்பு. அத்தனை சிறுகதைகளுமே ஈழத்தில் புரையோடிப்போயிருந்த சாதிய ஒடுக்குமுறைகள், அவமதிப்புக்கள், நிராகரிப்புக்கள், அதற்கெதிரான கிளர்ச்சிகள் போன்றவற்றை கண்முன்னே காட்டும் பொருளில் அமைந்துள்ளன.

தி.ஞானசேகரன் தொகுத்த “போர்க்காலக் கதைகள்” தொகுப்பு நூல் ஈழப்போர் ஏற்படுத்திய அனர்த்தங்களின் பல்வேறு கோலங்களை பேசும் 20 சிறுகதைகளின் தொகுப்பு. போர் தந்த அவலங்களும் அவற்றின் ஆறாத வடுக்களையும் பேசும் இச் சிறுகதைகளைப் படிக்கும்போது மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் விழிகள் கசிந்துதான் கடைசிப் பக்கத்தை தொட முடியும்.
என்னைப்பொறுத்தவரை இவை போன்ற இலக்கியங்கள் நம் வரலாற்றின் ஆவணங்களே.

1 Comment on “ஒடுக்கப்பட்டவர்கள்- போர்க்கால கதைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *