தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்

தகவல்- சயிக்கா பேகம் (இந்தியா)

தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அமைப்பாக ஸ்டெப்ஸ் (STEP) நிறுவனம் காணப்படுகின்றது

tamil nadu muslim.jpg1tamil nadu muslim.jpg2tamil nadu muslim.jpg3

தமிழ் நாட்டிலே பெண்களின் முன்னேற்றத்திற்காக, அதுவும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற ஓர் அமைப்பாக ஸ்டெப்ஸ் (STEP) நிறுவனம் காணப்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு ஷெரீபா கானம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான அநீதிகள் மற்றும் பாரபட்சங்களை எதிர்த்தும், பெண்கள் உரிமைகள் அதிலும் முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் அதிக கவனத்தை இவ்வமைப்பு செலுத்தி வருகின்றது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவ்வமைப்பானது உதவிகளைச் செய்து வருகின்றது. இனமத பேதமின்றி பெண்களுக்காக ஸ்டெப்ஸ் அமைப்பாளர்கள் செயற்பட்டு வருகின்றமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக 1995 ஆம் ஆண்டு திருச்சி விராலிமலை, பாத்திமா நகரில் சாமியார் எனத் தன்னைக் கூறிக் கொண்டு ஆச்சிரமம் நடாத்தி வந்த பிரேமானந்தா என்பவர் அங்கு வசித்து வந்த தாய் தந்தையற்ற சிறுமிகள் சிலரையும் வெளிநாட்டுப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன்போது பாதிக்கப்பட்ட 14 பிள்ளைகள் முக்கிய சாட்சிகளாக இருந்தனர். அவர்களுக்கு அவர்களுக்கு குறிப்பிட்ட வழக்கு முடியும் வரை இவ்வமைப்பே தேவையான பாதுகாப்பை வழங்கி உதவி புரிந்தது. இதனால் இவ்வமைப்பின் இணைப்பாளர் ஷெரீபா மீதும் நிறுவனத்தின் மீதும் மத ரீதியில் எதிர்ப்புக்கிளம்பியது.

tamil nadu muslim

அதாவது இந்துமதத்திற்குக் களங்கம் விளைவிக்கும் முகமாக இவ்வமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சதியே இது எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இறுதிவரை பிரேமானந்தா வழக்கில் ஸ்டெப்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இருந்ததோடு அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் பெண்கள் அமைப்பு எனும் ரீதியில் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தவிர இஸ்லாமியப் பெண்கள் தமது குடும்பங்களில் அனுபவிக்கும் குடும்ப வன்முறைகள், தன்னிச்சையாக வழங்கப்படும் தலாக் (விவாகரத்து),இ குர் – ஆனில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை மறுத்து ஆணாதிக்க சிந்தனைப் போக்குடன் சமூகம் செயற்படுவதை எதிர்த்தல், முழுக்க முழுக்க ஆண்களையே கொண்டமைந்த பாரம்பரிய ஜமாத்தில் தமது பிரச்சினைகளை முறையிட்டும் நீதி கிடைக்காத காரணத்தால் பாதிப்படைந்த பெண்கள் பற்றியும் இந்நிறுவனம் கவனத்தில் கொள்கின்றது. இதன் விளைவாக n~ரீபா கானம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத் ஆகும்.

tamil nadu muslim.jpg4

இது தற்போது புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, மதுரை, திண்டுக்கல், தேனீ, நாகபட்டினம், பொரம்பலூர்எனப் பல மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 15,000 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இதிலே இணைந்து செயற்படுகின்றனர். அத்தோடு இவ்வமைப்பினூடாக இஸ்லாமியப் பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள், பெண்களுக்கான கிராமிய வங்கி என்பனவும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்தினை உருவாக்க வேண்டிய தேவை பற்றி இவ்வமைப்பினர்குறிப்பிடுகையில் ‘இன்றைய கால கட்டத்தில், நம் இந்திய நாட்டில் நடைமுறை ரீதியில் பார்க்கும்போது இஸ்லாமியப் பெண்களுக்கு இஸ்லாமிய மதத்திலே வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் சிதைக்கப்பட்டு, இரட்டைச் சங்கிலி அடிமை முறையில் பிணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், மதத்தின் பெயரால், சுயநலவாதிகளால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கூடத் தட்டிக் கேட்க முடியாமல் அடக்கப்படுகின்றனர். அடிப்படை உரிமைகளைக் கூடப் பெறமுடியாத நிலையில் ஒடுக்கப்படுகின்றனர். ஆண்களையே உறுப்பினர்களாகக் கொண்ட சில ஜமாத்களும், முஸ்லிம் மக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை விசாரிக்கும் போதும், பெண்களின் பங்களிப்பு மற்றும் நியாயங்கள், ஆலோசனைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு ஆணாதிக்க சிந்தனைவாதிகளின் ஆதிக்கம் கொண்டதாகவே உள்ளது.

இவர்களின் பாரபட்சமான செயற்பாடுகளால் எமது முஸ்லிம் சகோதரிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஆணாதிக்க சிந்தனை கொண்ட சில ஜமாத்களால் புறக்கணிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக மேம்பாட்டிலும்,எம்மைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தை நிலை நிறுத்துவதற்காகவும்உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்” எனத் தமது தமிழ்நாடு பெண்கள் ஜமாத்தினைத் தோற்றுவித்தமைக்கான காரணங்களை விளக்குகின்றனர். தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்தின் நோக்கம் சுயமரியாதையும், வாழ்வியல் உரிமைகளும் மறுக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஏராளமான இஸ்லாம் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கைக்கு இன்னமும்இடமுண்டு என்பதை உணர்த்தல், இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பெண்களுக்கானஉரிமைகள் மறுக்கப்படுவதாலும், ஆண்கள் மதம் தருவதாகச் சொல்லிக் கொள்ளும் சலுகைகளாலும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பது போன்றவற்றைக் கொண்டுள்ளது.

• இஸ்லாத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளை உணரச் செய்வது
• மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழ் சுயதொழில் பயிற்சி மூலம் பொருளாதார மேம்பாடு அடையச் செய்வது
• எதிர்காலத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு மதத்தின் பெயரால் எழுப்பப்படும் தடைகளற்ற சமூகத்தை உருவாக்குவது
(பெண்கள் ஜமாத், முரசு-01,ஆனி, 2006)
தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்தினால் ஏற்பட்டுள்ள விளைவுகள்
• குறிப்பிட்ட காலத்திற்குள் ஜமாத்தின் செயற்பாடுகளை முஸ்லிம் பெண்களிடம் சென்றடையச் செய்தமை
• தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள ஆண்கள் ஜமாத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கின்ற அமைப்புகளின் செயற்பாடுகளை வலுப்படுத்தியமை
• மாநில மற்றும் தேசிய அளவில் வரதட்சணை ஒழிப்பு, முத்தலாக் போன்றவற்றின் பாதிப்புகளை பேசச் செய்தமை
• இஸ்லாமிய இளைஞர்கள் வரதட்சணை எதிர்ப்புக் குழு மூலம் திருமணமாகாத இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றமை

ஆண்களையே உறுப்பினர்களாகக் கொண்ட சில ஜமாத்களும், முஸ்லிம் மக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை விசாரிக்கும் போதும், பெண்களின் பங்களிப்பு மற்றும் நியாயங்கள், ஆலோசனைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு ஆணாதிக்க சிந்தனைவாதிகளின் ஆதிக்கம் கொண்டதாகவே உள்ளது. இவர்களின் பாரபட்சமான செயற்பாடுகளால் எமது முஸ்லிம் சகோதரிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்தின் எதிர்காலத் திட்டங்கள்

– இஸ்லாமியப் பெண்கள் தங்களைப் பற்றிப் பேசவும், தங்கள் நிலையை விளக்கிச் சொல்லவும், தங்களைப் பற்றி விளங்கிக் கொள்ளவும், இளைப்பாறவும், இன்னும் தம்மை மேம்படுத்திக் கொள்ளவும், மதவழிபாட்டில் ஈடுபடவும் முஸ்லிம் பெண்களுக்கான காப்பகம், பெண்களுக்கான தனிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுதல்
– முஸ்லிம் பெண்களுக்கான கல்வியை உயர்த்துதல் மற்றும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கல் 
–  இஸ்லாமியப் பெண்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய சட்டப்படியான உரிமைகள், ~ரியத்தில் சொல்லப்பட்ட சட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஊட்டல்
– தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் ஜமாத்தை உருவாக்கி பெண்களை விழிப்புணர்வூட்டல்
– பெண்கள் ஜமாத்தில் உள்ள பெண்களை மேலும் பலமுள்ளவர்களாக மாற்றல்
– முஸ்லிம் பெண்கள் நலனுக்காக மத்திய மாநில அரசுடன் பேச்சுக்களை நடாத்துதல்
(பெண்கள் ஜமாத், முரசு-01,ஆனி, 2006)

இவ்வாறு தமிழ்நாட்டிலே பெண்களுக்காக அதுவும் குறிப்பாக இஸ்லாம் பெண்களுக்காக சிறப்பாக செயற்பட்டுவரும் பெண்கள் ஜமாத் சமூகத்தில் உள்ள சிலரால் குற்றம் சாட்டப்படுகின்ற ஓர் அமைப்பாகவும் விமர்சிக்கப்படுவதனால் பல எதிர்ப்புகளையும், பலவகையான சவால்களையும் எதிர்கொள்கின்றது. அந்தவகையில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் சிலர் பெண்கள் ஜமாத் மற்றும் ஸ்டெப்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளை மதத்திற்கு எதிரான செயற்பாடுகளாகக் கருதி கருத்துகளை முன்வைக்கின்றனர். பெரும்பாலான பெண்களுக்குள் பதிந்துள்ள கலாசார மற்றும் மத ரீதியான பெண் உருவகமானது அவர்களைச் சிந்திக்க விடாது கட்டிப் போடுகின்றது. இதனைப் பலரும் தமக்கு சாதகமாகக் கொண்டு அவர்களை வெளிவரவிடாது தடுக்கின்ற போக்கு இன்னமும் நிலவுகின்றது. நியாயத்திற்காகப் பெண்கள் குரல் கொடுக்கும் போது அது மதத்திற்கெதிரானது என்று சிந்திப்பதனால் முன்னேற்றகரமான சிந்தனைகள் தடை செய்யப்படுகின்ற சூழலும் நிலவுகின்றது. அத்தோடு ஒரு சில பகுதிகளிலே முஸ்லிம் ஜமாத் பிரதிநிதிகளாக உள்ள பெண்களையும், ஜமாத்திற்கு ஆதரவாகச் செயற்படும் பெண்களையும் அப்பகுதி மக்கள் இழிவாகக் கருதி நடாத்துகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மிரட்டல்களும் விடப்படுவதுண்டு. இதனைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் மாநில அளவில் ஜமாத்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான வக்..;ப் போர்டு இவ்வமைப்பினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இவ்வாறான சவால்களை இன்னமும் தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஸ்டெப்ஸ் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் ஜமாத் ஆகியவை ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் பலவகையான உண்ணாவிரதப் போராட்டங்களையும், கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் நிகழ்த்திப் பெரும்பாலானோரது அதுவும் முற்போக்குச் சிந்தனையுடன் செயற்படுகின்ற பலரதும் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

tamil nadu muslim.jpg1tamil nadu muslim.jpg2tamil nadu muslim.jpg3

3 Comments on “தமிழ்நாடு இஸ்லாமியப் பெண்கள் ஜமாத்”

  1. Deepa Danraj’s new film Invoking Justice captures the spirit of STEPS in a complex, layered ways. An amazing effort to begin discussion son faith, gender and justice!

  2. அருமையான முயற்சி! முஸ்லிம் பெண்கள் ஜமாஅத்தின் முயற்சிகள் வெற்றியடைய நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    இலங்கையிலும் இவ்வமைப்பின் கிளை நிறுவப்பட்டால் சிறப்பாய் இருக்கும்.

    பெண்களும் பெண் ஆளுமைகளும் குழுவாய் இணைந்து தனித்தும் செயற்பட்டு சாதனை படைக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கும் அவர்களுக்கு இறைவன் அருள்புரியட்டும்.

    மேற்படி அமைப்பினரைத் தொடர்புகொள்ளும் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

  3. இந்த ஜமா அத்தில் பெண்களுக்கான குறைகளை கேட்டறிய பெண்கள் இல்லை. ஆண்கள் மட்டுமே கேட்கிறார்கள். ஒரு பெண் எல்லா விஷயங்களையும் எப்படி ஒரு ஆணிடம் சொல்வாள்..?அதுவும் அவரும் ஆணின் பக்கமே பேசுகிறார். அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக முடியாதா என்று அடுத்த கேள்வி.
    இப்போது ரிபா கானம் அங்கு இல்லாத சூழலில் அவரின் பொறுப்பில் இப்போது யார் இருக்கிறார் என்று தெரிய வில்லை. ரிபா கானம் மேடத்துக்கு போனில் அழைத்தால் பதிலும் இல்லை.
    விளம்பரம் தான் பெரிதாக இருக்கிறதே ஒழிய நிர்வாக செயல் பாட்டில் முறையின்றி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *